Archive for 'சீரடி சாயி பாபா'
முகவுரை – தொடர்ச்சி
குரு சாயி நாதரின் மகத்துவங்களைப் படித்ததாலும், அவரின் கொள்கைகள் மிகவும் எளிமையாக இருந்ததாலும் அவர்பால் கவரப்பட்டு இவ்விரண்டு ஆண்டுகளில் இரு முறை சீரடி சென்று வந்தேன். இம்முறை சென்றபொழுது ஆரத்தி முடிந்து வெளிவந்தபோது எவ்வகையிலாவது தொண்டு செய்யவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நின்றது.
அன்றிரவு தங்குமிடத்தே உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு வந்தது. அதில் நான் பகவான் சாயி பாபாவின் சரித்திரத்தை ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்தவர்கள் எள்ளி நகையாடினார்கள். மனம் தளர்ந்தேன்.
அதிகாலை [...]
Posted: September 13th, 2009 under சீரடி சாயி பாபா, முகவுரை.
Comments: 1
யார் அவர்?
இறையருள் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் மகத்துக்களாகிய மகான்களின் ஆன்மாவைப் பற்றியும் அவர்களின் பெருமைக்குறிய சிறப்புகளையும் பேசவோ, எழுதவோ அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி சிந்திக்கவோ இயலும். இது இறுதியில் ஆன்ம சுத்திக்கும், ஆன்ம விழிப்புக்கும் இறை உணர்வுக்கும் இட்டுச் செல்லும்.
யார் அவர்?
***********
சீரடி சாயி பாபாவை சரண் அடைந்தோருக்கு:
அவர்தான் அனைத்து உயிர்களின் ஆன்மா.
அவரே நமக்குள் எப்பொழுதும் நிரந்தரமாய் ஓடிக்கொண்டிருக்கும் மின்காந்த உணர்வு அலைகள்.
அவரே இறப்பற்ற உண்மை நிலை. ஒவ்வொரு ஆன்மாவிலும் பரவியுள்ளார்.
அவரே எப்பொழுதும் மங்காத ஒளி [...]
Posted: September 6th, 2009 under சீரடி சாயி பாபா, முகவுரை.
Comments: none
அகிலத்தோரே!
“ஒன்றே குலம். ஒருவனே தேவன்.
அன்பே சிவம்.
பசிக்கு உணவு. தாகத்துக்குத் தண்ணீர்.
இறைவனுக்குமுன் அனைத்து உயிர்களும் ஒன்றே.”
இத்தலையாய கொள்கைகளில் அசையா நம்பிக்கை வைத்து வாழ்ந்த ஒரு புண்ணிய ஆன்மாவின் வாழ்க்கை வரலாறு(கதைகள்), அவரின் கோட்பாடுகள், உபதேசங்கள் ஆகியன பற்றி அனைவரும் அறிந்துகொள்ள இவ்வலைப்பக்கத்தில் யாம் அறிந்தவற்றை இடலாமென்பதே எம் எண்ணம்.
இது நான் செய்யவில்லை.
இதை செய்வதும் அவரே!
இதன்மூலம் நமக்கு வழிகாட்டுபவரும் அவரே!
இறைவனை அடைய உள்ள வழிகளில் எளிதானது என்னும் பக்திவழியில் பயணிக்க “நம்பிக்கை” மிகவும் கட்டாயமான ஒன்று.
அது உள்ளவர்கள் இறைவனிடம் முழுவதுமாக [...]
Posted: September 2nd, 2009 under சீரடி சாயி பாபா, முகவுரை.
Comments: 2



